காமராஜர் பிறந்தநாள் விழா: தவெக சார்பில் இனிப்புகள் வழங்கல்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய 124 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது
திருவண்ணாமலை தமிழக வெற்றி கழகம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தமிழக வெற்றி தழகம் நிர்வாகிகள் கொண்டாடினார்கள்.
திருவண்ணாமலையில் உள்ள காமராஜர் சிலைக்கு திருவண்ணாமலை தமிழக வெற்றி கழகம் தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் பெருந்தலைவர்.
காமராஜர் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
இந்நிகழ்வில் திருவண்ணாமலை தமிழக வெற்றி கழகம் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


