in

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

 

கும்பகோணம் அருகே பெரப்படி கூட்டு வங்கி முன்பு தேர்தல் வாக்குறுதி படி விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா பெரப்படி கிராமத்தில் கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாட்டிலும் விவசாயிகள் கடுமையான கடன் நெருக்கடியில் உள்ள நிலையில் மாநில அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் ஐந்து ஏக்கருக்கு உட்பட்ட விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்திட 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் பெற்ற கூட்டுறவு பயிர் கடனை 50% தள்ளுபடி செய்திடவும் வாய்க்கால் வடிகால் ஆறுகளை தூர்வாரி விடவும் உரம் வாங்கும் போது விவசாயிகள் இடுபொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க வைப்பதை கண்டித்தும் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் ஒன்றிய செயலாளர் முருகன், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் எம் வி கண்ணன், தெரிவித்த போது காவிரி வறண்டு போனதால் குருவையும் காலியாகி சம்பாவும் நடக்குமா என்று தெரியவில்லை தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகள் அளித்தது போல் விவசாயிகள் கடனை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

அதேபோல் வருகிற 22ஆம் தேதி இந்திய அரசாங்கமும் அமெரிக்க அரசாங்கமும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து இட உள்ளனர். அதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகிற 22 ஆம் தேதி ட்ரம் படத்தையும் நரேந்திர மோடி படத்தையும் இந்தியா முழுவதும் அனைத்து வீதிகளில் படத்தை எரித்து எதிர்ப்பு தெரிவிக்க உள்ளோம் விவசாயிகள் மிக கடுமையான பாதிப்பால் வாழ்வா சாவோ சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவே போர்க்கால அடிப்படையில் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதில் ஒன்றிய செயலாளர் சுந்தர் சிஐடியு மாநில தலைவர் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்‌.

What do you think?

பச்சை மலை முருகன் ஆலயத்தில் ஆனி செவ்வாய் அபிஷேக ஆராதனை

திண்டுக்கல் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா: 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அழகு குத்தி ஊர்வலம்