in

சாலை வசதி இல்லாததால் கடும் அவதி அடையும் மலை கிராம மக்கள்

சாலை வசதி இல்லாததால் கடும் அவதி அடையும் மலை கிராம மக்கள்

 

சாலை வசதி இல்லாததால் கடும் அவதி அடையும் மலை கிராம மக்கள் – கிராம குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிவதில்லை என புகார்.

சாலை வசதியை ஏற்படுத்தி வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா வழங்க வேண்டும் எனவும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சாலப்பாறை கிராமம் அமைந்துள்ளது இந்த கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பல தலைமுறைகளாக சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மலை கிராமத்தில் வீடு கட்டி குடியேறும் மக்களுக்கு வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா மற்றும் சாலை வசதி வழங்க கோரி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை அளித்துள்ளனர்.

கிராமத்தில் சாலை வசதிகள் இல்லாத காரணத்தால், சில குழந்தைகளை போடி உள்ளிட்ட நகர் பகுதிகளில் தங்கி கல்வி கற்று வருவதாகவும்.

மேலும் சாலை வசதி இல்லாத காரணத்தினாலேயே சில குழந்தைகள் பள்ளி செல்ல முடியாத சூழல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இங்கு குடியிருந்து வருகின்ற பொது மக்களுக்கு 2006 வன உரிமை சட்டத்தின் படி பட்டா மற்றும் போதிய சாலை வசதியை செய்து தர வேண்டி சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

பிலிப்ஸ் ஸ்மார்ட் லைட் ஹப்பின் பிரத்யேக ஷோரூமை திறந்து வைத்த முதலமைச்சர்

திருவாடானை அருகே கோவில் திருவிழா: விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம்!