in ,

புவனகிரியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் பார்த்திபன் திவ்யதர்ஷினி ஆகியோர் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புவனகிரியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் புவனகிரி பாலக்கரை அருகாமையில் ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் உடனடியாக இயற்றிட கோரிக்கை வைத்தும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் காதலர்கள் பார்த்திபன் திவ்யதர்ஷினி ஆகியோர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் புவனகிரி தொகுதி மாவட்ட செயலாளர் அரங்கத் தமிழ்ஒளி தலைமையில் பாலக்கரை அருகாமையில் நடைபெற்றது இதில் கட்சியின் மாநில மாவட்ட மற்றும் பல்வேறு நிலை நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் ஆர்ப்பாட்டத்தில் ஆணவ படுகொலை பாதக செயலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும் மேலும் ஆணவப் படுகொலைக்கு தனி சட்டம் உடனடியாக இயற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்

What do you think?

புவனகிரி அருகே பு. ஆதிவராகநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்