கந்த சஷ்டி விழா முத்தங்கிசிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான்
நாமக்கல் ராசிபுரம் அடுத்த கல்லாங்குளம் அண்ணாமலையார் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா 2-ம் நாள் முத்தங்கிசிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கல்லாங்குளம் அண்ணாமலையார் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கிநடைபெற்று வருகின்றன.

நேற்று இரவு இங்கு உள்ளஶ்ரீபாலதண்டாயுதபானி முருகபெருமானுக்கு பால் தயிர் பஞ்சாமிர்தம் விபூதி சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு கோபுர தீபம் உட்பட பல்வேறு தீப உபசரிப்புகளுடன் மகா தீபாராதனைகள் நடைபெற்றது.

பக்தர்கள் கந்தசஷ்டி கவசத்தை பக்தியோடு பாராயணம் செய்தனர். நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


