in

வேடசந்தூர் பகுதியில் செல்லும் குடகனாற்றில் டேங்கர் லாரிகள் மூலம் ரசாயன மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு 

வேடசந்தூர் பகுதியில் செல்லும் குடகனாற்றில் டேங்கர் லாரிகள் மூலம் ரசாயன மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் – கரூர் தேசிய நான்குவழிச் சாலை வேடசந்தூரிலிருந்து விட்டல்நாயக்கன்பட்டி வழியாக தாடிக்கொம்பு செல்லும் குடகனாற்றில், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் ரசாயன கழிவுகள் டேங்கர் லாரிகள் மூலம் இரவு நேரங்களில் கொண்டு வந்து கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆற்றுநீரில் துர்நாற்றம் வீசி, நீர் மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது மட்டுமில்லாமல் மீன்களும் இறந்து மிதப்பதாக குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் வினோதினி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

தொழிற்சாலை அல்லது மர்ம நபர்களால் கழிவுகள் கொட்டப்பட்டாத என்பது குறித்து விரைவில் ஆய்வு முடிவுகளில் தெரியவரும் என்று வினோதினி தெரிவித்தார் மேலும் குடகனாற்றை மாசுபடுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடகனாறு பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முழியன்குளத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்

கோவையில் பாதாள சாக்கடை குழியில் சிக்கித் தவித்த லாரி