மீனவர் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி
கடந்த 3ம் தேதி சென்னையில் இருந்து மீனவர்கள் ஆந்திர கடலோரப் பத்திக்கு மீன் பிடிக்க சென்றபோது முரசு புயல் சிக்கி மாயமானார்கள்.
இதில் சிதம்பரம் அருகே உள்ள சாமியார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் நாராயணசாமியின் உடல் சமீபத்தில் கரை ஒதுங்கியது.
பிரேத பரிசோதனைக்கு பின் மீனவர் நாராயணசாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று சாமியார்பேட்டை கிராமத்திற்கு வந்த மீனவர் நாராயணசாமி(58) உடலுக்கு அமைச்சர் அஞ்சலி.
தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் சாமியார்பேட்டை கிராமத்திற்கு நேரில் சென்றனர்.

மீனவர் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினரிடம் நிவாரண உதவித் தொகையையும் அமைச்சர் வழங்கினார்.


