in

ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ் என்ற போதை பொருள் விழிப்புணர்வு ஓட்டப் போட்டி

ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ் என்ற போதை பொருள் விழிப்புணர்வு ஓட்டப் போட்டி

 

மயிலாடுதுறையில் நடைபெற்ற ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ் என்ற போதை பொருள் விழிப்புணர்வு ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சியர் மாவட்ட எஸ் பி துவங்கி வைப்பு. 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பெரியோர்கள் பங்கேற்பு.

சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ் என்ற போதை பொருள் விழிப்புணர்வு ஓட்டப் போட்டி மயிலாடுதுறையில் நடைபெற்றது.

இந்திய விளையாட்டு ஆணையம் சாய் விளையாட்டு அரங்கில் துவங்கிய விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சிய ஸ்ரீகாந்த், மாவட்ட எஸ்பி புக்கியா சிநேக பிரியா ஆகியோர் துவங்கி வைத்தனர்.

தருமபுரம் சாலை வழியாக நடைபெற்ற விழிப்புணர்வு ஓட்டம் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

போதைக்கு எதிரான இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் ஐந்து வயது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

What do you think?

அகரஅன்னவாசல் வீரமா காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்