in

ஆர். எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் பெட்டிஷன் மேளா நிகழ்வு

ஆர். எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் பெட்டிஷன் மேளா நிகழ்வு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஆர். எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்கும் “பெட்டிஷன் மேளா” நிகழ்வு நடைபெற்றது. வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த மேளா நடைபெறும்.

என தமிழக முதல்வர் அறிவித்திருந்த நிலையில், இன்று ஆர். எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ரபீக் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறை தீர்க்கும் மனுக்களைக் கொடுத்தனர். அவற்றை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர், உரிய விசாரணை மேற்கொண்டு மனுக்களுக்குச் சமரசத் தீர்வு கண்டார். இத்தூய்மையான மற்றும் விரைவான நடவடிக்கை பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது

What do you think?

சட்டசபை என்பது திரையரங்கு அல்ல. சட்ட சபைக்கென மாண்புகள் உண்டு. மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ பேட்டி

வேப்பூர் அருகே பள்ளி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து வசதி இல்லாததால் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம்