மாங்காடு அருகே தனியார் பள்ளியில் பெயிண்டிங் வேலை செய்த போது நான்காவது மாடியில் இருந்து விழுந்து பெயிண்டர் பலி
மதுரவாயலை சேர்ந்தவர் கோவில்ராஜ்(32), பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
நான்காவது மாடியில் இருந்து கயரில் தொங்கியபடி ராஜ் என்பவர் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தபோது அந்த கயிற்றை இழுத்து பிடித்தவாறு கோவில் ராஜ் நான்காவது மாடியில் நின்று கொண்டு இருந்தார் அப்போது திடீரென நிலை தடுமாறி கோவில்ராஜ் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்து மயங்கினார்.
ராஜ் கீழே விழுந்து லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் கோவில்ராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவர் வரும் வழியில் இறந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்து நிலையில் இது குறித்து மவுலிவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் இறந்து போன கோவில்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்ட்னர். மேலும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தின் காரணமாகவே கோவில் ராஜ் இறந்து போனதாக அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

