in

13 கார்கள், 100 கணினிகள் ஜப்தி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

13 கார்கள், 100 கணினிகள் ஜப்தி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

 

மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு சொந்தமான 13 கார்கள் மற்றும் 100 கணிணி, 200 பீரோ ஆகியவற்றை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற பணியாளர்கள்.

 

மதுரை மாவட்டம் உத்தங்குடி நீதிமன்றம் அருகேயுள்ள அருள்மிகு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகரத்தார் டிரஸ்ட் சார்பில் இரண்டரை ஏக்கர் நிலமானது கடந்த 2004 நெடுஞசாலைத்துறையினரால் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.

இந்த நிலத்திற்கு 2022 ஆம் ஆண்டு வரையிலான இழப்பீட்டு தொகையாக 2 கோடியே 42 லட்சத்தி 69 ஆயிரம் ரூபாயை அரசு தரப்பில் வழங்கப்படாத நிலையில் மனுதாரர் லெட்சுமண செட்டியார் தரப்பில் மதுரை மாவட்ட 5 ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் கார் உள்ளிட்ட 13 கார்கள், 100 கணிணிகள், 20 லேப்டாப் 200 பீரோக்கள் 200 நாற்காலி ஜெராக்ஸ் பிரிண்டர் ஏசி உள்ளிட்டவைகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மூன்றரை கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்காத நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மனுதாரர் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் வழக்கறிஞர் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் உள்ளிட்டோரின் வாகனங்களை ஜப்தி செய்தனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட அசையா பொருட்களை ஜப்தி செய்ய உள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளின் கார்கள் மற்றும் கணினி ஆகிய பொருட்களை ஜப்தி செய்ய உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

What do you think?

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன்

ராமேஸ்வரத்தில் முதல் முறையாக திறக்கப்பட்ட ரயில் பெட்டிகளுடன் கூடிய உணவகம், திறந்து வைத்த மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா.