அண்ணா திடல் வணிக வளாகக் கடைகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு
அண்ணா திடல் வணிக வளாக கடைகளின் சாவிகள் தொகுதி எம்எல்ஏ நேரு முன்னிலையில் முதலமைச்சர் ரங்கசாமி பயனாளிகளிடம் வழங்கினார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட அண்ணா திடல் விளையாட்டு மைதானத்தை ஒட்டியுள்ள அண்ணா சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள், கடந்த தேர்தலுக்கு முன்பு அங்கு வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து, கடைகளின் சாவிகள் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு ஆகியோரால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஸ்ரீஜித், வருவாய் அதிகாரிகள் பிரபாகரன், சிவா இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
கடைகளின் சாவிகளை பெற்றுக்கொண்ட வியாபாரிகள், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ. நேரு ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.


