in

ஆதவ் அர்ஜுனா எம்எல்ஏக்களை விலை பேசி வாங்கி வருகிறார்- நயினார் நாகேந்திரன் பேட்டி

ஆதவ் அர்ஜுனா எம்எல்ஏக்களை விலை பேசி வாங்கி வருகிறார்- நயினார் நாகேந்திரன் பேட்டி

 

ஆதவ் அர்ஜுனா எம்எல்ஏக்களை விலை பேசி வாங்கி வருகிறார். அண்ணாமலை போஸ்டரில் ரஜினி படம் இடம்பெற்றதற்கும் அவரை நான் சந்தித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

பாஜக நெல்லை வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் தயா சங்கர் தலைமையில் கடந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்டோர் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தற்போது அவர்கள் மீண்டும் திமுகவிலிருந்து விலகி தாய் கழகமான பாஜகவிற்கு திரும்பி உள்ளனர்.

இந்த இணைப்பு விழா நெல்லை பாளையங்கோட்டை பெருமாள் புரம் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் நெல்லையில் இன்று பா.ஜ.க. தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த தயாசங்கர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பா.ஜ.க.வில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 35 நாட்கள் ஆகிவிட்டது. எங்கு பார்த்தாலும் பாலியல் குற்றச் சம்பவங்களே நடைபெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களில் மட்டும் 17 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது “ப்ரோ”, “அங்கிள்” என்று பேசிய விஜய் தற்போது எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு முள்ளுப்புதரில் வீசப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் எல்லாம் முதல்-அமைச்சர் விஜய்க்கு தெரியுமா? நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 40 பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளன.

இதுகுறித்து வாயே திறக்காமல் முதல்-அமைச்சர் காலை 10 மணிக்கு தலைமைச் செயலகம் வருகிறார். மாலை 5 மணிக்கு வீட்டுக்கு செல்கிறார். டிபன், சாப்பாடு சாப்பிடுகிறார். ஆனால் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை. சினிமா பிரபலங்களை மட்டும் சந்தித்து புகைப்படம் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆட்சிக்கு வரும் முன்பே அ.ம.மு.க. உறுப்பினர்களை விலை பேசி வாங்கினர். தற்போது குதிரைப் பேரம் நடத்தி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வருகின்றனர். உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது வேறு, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது வேறு. இதன் மூலம் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகிறது.

அரசின் பணம் வீணாகிறது. இது முதிர்ச்சியற்ற செயல்.
குதிரைப் பேரம் நடத்தி வரும் இந்த அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ஆதவ் தொடர்ந்து விலை பேசி வாங்கி வருகிறார். இது நீண்ட நாட்கள் நீடிக்காது.

வரும் காலம் பா.ஜ.க.வின் காலமாக இருக்கும். விஜய்க்கு அரசியல் முதிர்ச்சி இல்லை. விஜய், அண்ணாமலை போன்றோர் புதிய கட்சி தொடங்கியதால் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

கடந்த 12 ஆண்டுகளாக நமது பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி நடத்தி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் உடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. கடந்த ஆட்சியைப் போலவே தற்போதைய ஆட்சியிலும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் தவறிவிட்டார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது காலையில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது, மாலையில் அது திரும்பப் பெறப்படுகிறது. ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் சிவகங்கையில் அந்தக் குழுவில் இருந்த பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
அண்ணாமலைக்கு 17 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று கூறுகிறார்கள். ஒரே நாளில் எனக்கும் 30 லட்சம் பேர் ஆதரவாக உள்ளனர் என்று என்னால் காட்ட முடியும். தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா என்று கேட்கிறீர்கள்.

தேர்தல் நேரத்தில் அதுகுறித்து பதில் தெரிவிப்போம். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தபோதும், தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் அவரது செயல்பாடு திருப்திகரமாக இல்லை என தெரிவித்தார்.

What do you think?

28 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீ காந்தாரி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்

விற்காத மாம்பழங்களை டிராக்டரில் ஏற்றி குப்பையில் கொட்டும் அவலம்