அனைத்து வாகனங்களுக்கும் வர்ணம் தீட்டும் பணிகள் துவக்கம்
கார்த்திகை தீப திருவிழாவின் பத்து நாட்கள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் உலா வரும் சிம்ம வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் வர்ணம் தீட்டும் பணிகள் துவக்கம்…..

கார்த்திகை தீபத் திருவிழாவில் 10 நாட்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் வலம் வரும் பஞ்ச மூர்த்திகளின் வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெறு வருகிறது.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். அனுதினமும் விநாயகர், முருகர், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 24ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்நிலையில் பத்து நாட்கள் நடைபெறும் திரு கார்த்திகை தீபத் திருவிழாவில் காலை மற்றும் இரவு உற்சவத்தில் பஞ்ச மூர்த்திகள் உலா வரும் மர வாகனங்கள் மராமரத்து பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் துவங்கியுள்ளது. காமதேனு வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் வர்ணம் தீட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.


