in

ஓசூர் ரங்கோ பண்டிதர் அக்ரஹாரத்தில் வேணுகோபாலசாமி கோவிலில் நான்கு வகையான ஹோமங்கள்!

ஓசூர் ரங்கோ பண்டிதர் அக்ரஹாரத்தில் வேணுகோபாலசாமி கோவிலில் நான்கு வகையான ஹோமங்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ரங்கோ பண்டிதர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலசாமி திருக்கோவிலில், ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம், தன்வந்தரி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம் மற்றும் நரசிம்மர் ஹோமம் என நான்கு வகையான சிறப்பு ஹோமங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

 

இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து யாக குண்டங்களில் அக்னி வளர்க்கப்பட்டு, உலக நன்மை, மக்கள் நலன், குடும்பங்களில் மகிழ்ச்சி, நோயற்ற வாழ்வு, கல்வி மற்றும் ஞானம் பெருக வேண்டி மகா சுதர்சன ஹோமம், தன்வந்தரி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், நரசிம்மர் ஹோமம் ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, கோவிலில் எழுந்தருளியுள்ள உற்சவர் ஸ்ரீ வேணுகோபாலசாமி, ருக்மணி மற்றும் சத்யபாமா தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் உற்சவர் ஸ்ரீ வேணுகோபாலசாமிக்கும், ருக்மணி மற்றும் சத்யபாமா தாயார்களுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

What do you think?

மயிலாடுதுறையில் 847 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.34 கோடியில் உதவி உபகரணங்கள்!

 தூய்மை பணியாளர்களை பாராட்டிய  பிரேமலதா விஜயகாந்த்