in

கடற்கரை சாலையில் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

கடற்கரை சாலையில் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

 

புதுச்சேரி விடுதலை நாளை முன்னிட்டு கடற்கரை சாலையில் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது…

பிரான்ஸ் ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி 1954 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி முறைப்படி இந்திய ஆட்சி பரப்போடு இணைந்தது. இந்நாளை புதுச்சேரியின் விடுதலை நாளாக புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் கொண்டாடுகிறது.

அதன்படி நவம்பர் 1-ஆம் தேதி விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்வில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறை மற்றும் பல்வேறு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொள்ள உள்ளார்.

இதனையொட்டி இன்று கடற்கரை சாலையில் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் காவல்துறை, தீயணைப்புத்துறை வீரர்கள், என்.சி.சி (NCC) மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன

டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.க்கள் கலைவாணன், நாரா சைதன்யா உள்ளிட்டோர் அணிவகுப்பு ஒத்திகையை பார்வையிட்டனர்.

விடுதலை திருநாளை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலை அமைந்திருக்கும் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

What do you think?

பட்டை நாமம் கருப்பு துண்டு அணிந்து போராட்டம்

மயிலாடுதுறையில் 847 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.34 கோடியில் உதவி உபகரணங்கள்!