in

உரிய விசாரணை இன்றி கைது செய்ததாக குற்றச்சாட்டு; சிபிசிஐடி விசாரணை கோரிக்கை

உரிய விசாரணை இன்றி கைது செய்ததாக குற்றச்சாட்டு; சிபிசிஐடி விசாரணை கோரிக்கை

 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக்கழக பெண் நிர்வாகி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. தொடர்பான வழக்கில் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தாமல் தனது கணவர் பாலசுப்பிரமணியத்தை கைது செய்துள்ளதாக பாலசுப்பிரமணியத்தின் மனைவி மற்றும் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார், புகார் அளித்த தமிழக வெற்றி கழக பெண் நிர்வாகி பணம்பரிக்கும் நோக்குடன் இந்த புகாரை அளித்துள்ளதாக குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை சிபிசிஐடி மாற்ற வேண்டுமென கோரிக்கை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி தன்னை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளான பாலசுப்பிரமணியம் மற்றும் ஜெயபால் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதிக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிரமணியன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று பாலசுப்பிரமணியத்தின் மனைவி முத்து பிரியா மற்றும் அவரது உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து இந்த சம்பவம் நடந்து ஒரு மாதமாக இருந்த நிலையில் தற்போது பணம் பறிக்கும் நோக்கத்துடன் அந்தப் பெண் புகார் அளித்துள்ளதாகவும் தனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை புகார் அளித்த பெண்ணுடன் சென்ற மற்றொரு பெண் என்னிடம் பேசியுள்ளார் அதில் எந்த தவறும் நடக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் காவல்துறை உரிய விசாரணை நடத்தாமல் எனது கணவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

சம்பவம் நடந்ததாக கூறப்பட்டதில் இருந்து ஒரு மாதம் கழித்து அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

எனவே இது பொய் புகார் அந்த பெண்ணுக்கு பல நபர்களுடன் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டிய பாலசுப்பிரமணியன் மனைவி இந்த வழக்கை உரிய முறையில் விசாரணை செய்ய வழக்கை சிபிசிஐடி காவல்துறை விசாரணை செய்ய உத்திரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

மேலும் பாலசுப்பிரமணியன் மனைவி முத்து பிரியா கூறுகையில் எனது கணவரிடம் புகார் அளித்த பின் 75 ஆயிரம் வரை பெற்று கொள்வதற்காக ஆதாரம் இருப்பதாக அந்த ஆவணத்தை காண்பித்தார்.

What do you think?

கேட்பாரற்று கிடக்கும் அம்மா உடற்பயிற்சி கூடம்

தென்மேற்கு பருவமழை எதிரொலி: தூத்துக்குடியில் மிதமான மழை