இறங்குதள பாலத்தில் கனரக லாரியால் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தை மீன்பிடி தடைக்காலத்திற்குள்ளாக உடனடியாக சீரமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தில்
நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் மன்னார் வளைகுடா பகுதியில் செயற்கை பவளப்பாறை மேம்பாட்டு பணிக்கு கான்கிரீட் சிமெண்ட் தடுப்புகள் கனரக லாரியில் கிரேன் உதவியுடன் ஏற்றப்பட்டது.
அப்போது மீன்பிடி இறங்குதள பாலத்தில் வந்த போது கனரக லாரியின் பின் சக்கரங்கள் பாலத்தில் உடைந்து திடீரென பள்ளம் ஏற்பட்டது. உடனடியாக லாரியில் இருந்த சிமெண்ட் தடுப்புகள் மற்றும் லாரி கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டது.
இதனால் அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. உடனடியாக தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஒரு வாரத்திற்குள் மீன்பிடி தடைக்காலம் முடிவதற்குள் விரைந்து பள்ளத்தை மீன்வள துறைமுக அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மீன்வள துறைமுக அதிகாரிகள் தரப்பில் மீன்பிடித்தடை காலம் முடிவதற்குள்ளாக ஒரு வாரத்திற்குள் பள்ளம் சீரமைக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர்.


