திருநாள் கொண்டச்சேரி கிராமத்தில் பொன்னம்மா காளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருநாள் கொண்டச்சேரி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பொன்னம்மா காளியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு பின்னர் தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வளம் வந்து கும்ப கலசத்தை அடைந்தது கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது .
இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


