in

தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல்

 தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல்

 

புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கோரி திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை முற்றுகையிட்டு விவசாயிகள் சூழ்ந்து கொண்டதால் காவல்துறையினர் அவரை மீட்டு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

டெல்டா மாவட்டங்கள் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்தும் கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து தஞ்சை மாவட்டம் உய்யங்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு தற்போது வரை தண்ணீர் வராததால்

அசூர், பொய்யங்குடி, வல்லம் புதூர் பாளையப்பட்டி குரும்பூண்டி ஆச்சாம்பட்டி உள்ளிட்ட 20 கிராமங்களில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்

புதிய கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி மூன்று முறை சமரச பேச்சுவார்த்தை நடந்து தோல்வி அடைந்த காரணத்தினால் இன்று விவசாயிகள் தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

சம்பவ இடத்திற்கு வந்த புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் செயற்பொறியாளர் திருமூர்த்தியை விவசாயிகள் முற்றுகையிட்டு சூழ்ந்து கொண்டதால் காவல்துறையினர் விவசாயிகளிடமிருந்து செயற்பொறியாளரை பாதுகாப்பாக மீட்டு அழைத்துச் சென்றனர் இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

What do you think?

உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா

தமிழ் சங்கமம் விரைவு வண்டியில் 20 கிலோ குட்கா பறிமுதல்