கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிய வாகன பழுதுபார்ப்போர் சங்கம்
வாகன முகப்பு விளக்கு கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிய வாகன பழுதுபார்ப்போர் சங்கம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் மயிலாடுதுறை வாகன பழுது பார்ப்போர் சங்கத்தின் மூலமாக வாகனத்தின் முன் உள்ள முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த ஸ்டிக்கர் ஒட்டும் பணியை போக்குவரத்து வட்டார அலுவலர் ராம்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார் சங்கத்தின் சட்ட ஆலோசகர் வேலு குபேந்திரன் முன்னிலை வகித்தார்.
வாகனத்தின் முன் உள்ள முகப்பு விளக்கால் எதிரில் வரும் வாகனங்கள் தடுமாற்றம் ஆகாமல் இருக்கவும் விபத்தினை தடுக்கவும் இந்த ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சி நிறைவாக மாவட்ட தலைவர் பகவதிகுமார் நன்றி உரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் 50 க்கு மேற்பட்ட வாகன பழுதுபார்ப்போர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.