மஹாளய அமாவாசை காவிரி ஆற்றில் மூதாதையர்களுக்கு திதி
மஹாளய அமாவாசை முன்னிட்டு திருவையாறு காவிரிகரை புஷ்பமண்டப படித்துறையில் புனித நீராடிய மக்கள் அரிசி காய்கறி ஆகியவற்றை புரோகிதர்களுக்கு தானமாக கொடுத்து தங்களது மூதாதையர்களுக்கு திதி கொடுத்து எள் தண்ணீரை காவிரி ஆற்றில் விட்டு வழிப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் புனித நீராடினால் காசியில் நீராடியதை விட புண்ணியம் அதிகம் என்பது மக்களின் நம்பிக்கை.
வருடாந்திர திதி கொடுக்க தவறவிட்டால் மஹாளய அமாவாசை அன்று புண்ணிய தலங்களில் திதி கொடுத்தால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க மஹாளய அமாவாசை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் குவிந்த மக்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி மறைந்த தங்களது மூதாதையர்களை நினைத்து அரிசி காய்கறிகள் கீரை ஆகியவற்றை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி எள் தண்ணீரை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானை கைக் கூப்பி வணஙகி திதி கொடுத்து வழிப்பட்டனர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திதி கொடுக்க திரண்டு உள்ளதால் திருவையாறு நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
