in

நடராஜர் ஆலயத்தில் பாமகவினர் வழிபாடு

நடராஜர் ஆலயத்தில் பாமகவினர் வழிபாடு

 

பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு மிக பிரமாண்டமான நடராஜர் ஆலயத்தில் பாமகவினர் வழிபாடு…

பாமக தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் பாமகவினர் வழிபாடு செய்தனர்.

இந்த பிறந்தநாள் விழாவானது முன்னாள் பாமக மாவட்ட செயலாளரும், வடக்குத்து ஊராட்சியின் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவருமான வடக்குத்து ஜெகன் தலைமையில் மிக பிரமாண்டமான நடராஜருக்கு அபிஷேக ஆராதனை செய்யபட்டு அன்புமணி இராமதாஸ் பெயரில் அர்ச்சனை செய்யபட்டது.

மேலும் அவரின் பிறந்தநாளை மது உழிப்பு தினமாக கொண்டாடும் வகையில், பாமகவினர் மது ஒழிப்பு உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

பின்னர் ஆலய வளாகத்தில் பொதுமக்ளுக்கும், பாமகவினருக்கும் அன்னதானங்களையும், தென்னங் கன்றுகளையும், வடக்குத்து ஜெகன் அவர்கள் வழங்கினார்.

இந்த பிறந்தநாள் விழாவில் கடலூர் பாமக வடக்கு மாவட்ட நிர்வாகிகள், பசுமை தாயக நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள், என்.எல்.சி. தொழிற்சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்நு கொண்டனர்.

What do you think?

சிபிசிஐடி போலீஸார் அதிரடி சோதனை

வசந்த் & கோ நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா