in

குற்றாலம் குற்றாலநாதர் ஆலய ஐப்பசி விசு திருவிழா

குற்றாலம் குற்றாலநாதர் ஆலய ஐப்பசி விசு திருவிழா

 

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில், வெகு விமரிசையாக தொடங்கிய ஐப்பசி விசு திருவிழா – ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அருள்மிகு திருக்குற்றாலநாதர் குழல்வாய்மொழியம்மை திருக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி ஐப்பசி விசு திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. சுவாமி சந்ததி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.

இன்று முதல் 10 நாட்கள் ஐப்பசி 1-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஐப்பசி விசு திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பஞ்சமூர்த்திகள் புறப்பாடு வருகின்ற 12-ஆம் தேதியும், 15-ஆம் தேதி திருக்கோவில் மணிமண்டபத்தில் நடராசமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நிகழ்வும், வருகின்ற 16-ஆம் தேதி நடராசமூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்ட தீபாராதனையும் நடைபெற உள்ளது.

பாரம்பரியமிக்க குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான ஐப்பசி விசுத் திருவிழாவில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் மட்டுமல்லாது, சுற்றுலா பயணிகளும் கலந்து கொள்வதால் தேவையான முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

What do you think?

புரட்டாசி மாத குருவார பிரதோஷம்

ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில் பிரதோஷ சிறப்பு பூஜை