in

புதுச்சேரி…சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை.

புதுச்சேரி…சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை.

புதுச்சேரி அரசு, சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் மற்றும் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவையில்
நடைபெற்றது.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜீம் ஆறுமுகம், செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேல் மற்றும் மருத்துவ அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

புதுச்சேரியில் சிவப்பு நிற குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை வைத்திருக்கும் குடும்பத்திற்கு ஆண்டிற்கு ரூ.5 இலட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கும் ஆயஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல், மஞ்சள் நிற குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு மருத்துவச் செலவை திரும்பப் பெறுவதற்கான (Medical Reimbursement) புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

புதுச்சேரியில் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் கூடுதலான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும், மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

What do you think?

புதுச்சேரியில் பெண் பூனையான ஜிஞ்சுக்கு வளைகாப்பு…

புதுச்சேரியில் போதையில் தறிகெட்டு ஓடிய கார்