சாய் பாபா கோவிலில் சிறப்பு பூஜை
ஓசூர் ஏரி தெரு சாய் பாபா கோவிலில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏரி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் பாபா கோவிலில் புரட்டாசி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி காலை ஸ்ரீ சாய் பாபா சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனை, நட்சத்திர தீப ஆராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

மேலும், பக்தர்கள் சார்பில் ஸ்ரீ சாய் பாபா சுவாமிக்கு சிறப்பு சாக்லேட் மாலை அணிவித்து பக்தியுடன் வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சாய் பாபாவை தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
