in

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் சாமி தரிசனம்

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் சாமி தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி குடிம்பத்துடன் தென்னிந்தியாவில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆன்மீக பயணத்தின் ஒருபகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்து கொண்டு இன்று இரவு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ள 21 புண்ணிய தீர்த்த கிணறுகளில் குடும்பத்துடன் புனித நீராடிய பிரகலாத் மோடி பின்னர் திருக்கோயில் உள்ள ராமநாத சுவாமி மற்றும் பருவதவர்த்தினி அம்பாளை குடும்பத்துடன் மனம் உருகி பிரார்த்தனை செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாக் மோடி ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்ததால் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரரான பிரகலாத் மோடிக்கு உள்ளூர் பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். மேலும் திருக்கோயிலுக்குள் பாஜகவினர் ராமாயணம் வரலாறு குறித்து எடுத்து கூறினர்கள்.

What do you think?

தஞ்சை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ரேவதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பல்வேறு கிராமங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்