in

சட்டப்பேரவை வளாகத்தில் ரூ.2.5 லட்சத்தில் புதிய தீயணைப்பு கருவிகள் மற்றும் செயல் விளக்கங்கள்


Watch – YouTube Click

சட்டப்பேரவை வளாகத்தில் ரூ.2.5 லட்சத்தில் புதிய தீயணைப்பு கருவிகள் மற்றும் செயல் விளக்கங்கள்

 

புதுச்சேரி சட்டப்பேரவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது இதில் ஒரு பகுதியாக தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது இதனை சபாநாயகர், முதல் அமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் அலுவலகங்கள் உள்ளன.

சட்டப்பேரவை வளாகத்தில் அனைத்து அலுவலகங்களிலும் தீயணைப்புக்கருவி புதிதாக இன்று பொருத்தப்பட்டது.

அதன் செயல் விளக்கம் இன்று காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம் வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் சட்டப்பேரவை செயலர் மற்றும் சட்டப்பேரவை காவலர்கள் கலந்து கொண்டனர்….

அதைத்தொடர்ந்து சபாநாயகர் செல்வம் சந்தித்தார்…புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்துக்கு புதிதாக தீவிபத்தை தடுக்க யுக்திகளை கொண்ட அறிவியல் பூர்வமான புதிய முறை வடிவமைப்பு செய்துள்ளோம்.

தீயணைப்பில் இருந்து பாதுகாக்க வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை முழுக்க தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவை பாதுகாவலர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது.

தீவிபத்து இங்கு நிகழ்ந்தால் பாதுகாக்க வழிமுறை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 2.5 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. ” என்று குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து பயிற்சியாளர்கள் கூறுகையில், “தீயணைக்கும் கருவி புதிய முறை இது. எளிதாக தீயை அணைக்கலாம். சட்டப்பேரவையில் அனைத்து இடங்கள், அறைகளில் வைத்துள்ளோம்.இதில், கார்பன் டை ஆக்சைடு மற்றும் பவுடர் இருக்கும். அது தீயில் படியும், ஆக்ஸிசனை இழுக்கும். தீயை கட்டுக்குள் கொண்டு வரும் என்று குறிப்பிட்டார்..


Watch – YouTube Click

What do you think?

இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் ஐரோப்பிய ஒன்றியம் ஷாக்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் சித்திரை மாத பௌர்ணமி விளக்கு பூஜை 108 பெண்கள் பங்கேற்று மனம்