in

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் அடுத்தடுத்து வெளியாகும் சிசிடிவி காட்சிகள்


Watch – YouTube Click

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்

அடுத்தடுத்து வெளியாகும் சிசிடிவி காட்சிகள்

பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற ஓட்டலில் நேற்று மதியம் திடீரென வெடிகுண்டு வெடித்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டு விபத்தில் உணவக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ராமேஸ்வரம் கஃபேவில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் தடவியல் குழு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வு மேற்கொண்டனர்.

அதேசமயம் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதோடு, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து ஏற்கனவே சந்தேக நபர் ஒருவரை கைது செய்து பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து,  காலை தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) குழுவினர் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது, குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு முன் சந்தேக நபர் ஓட்டலுக்கு நடந்து செல்வது போன்ற புதிய சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். புதிய சிசிடிவி காட்சிகளில், சந்தேக நபர் வெள்ளை தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்து, தோளில் பையை ஏந்தியபடி, ஓட்டலை நோக்கி நடந்து செல்வதைக் காட்டுகிறது.

அந்த பையை கஃபேக்கு அருகில் வைத்துவிட்டு வெளியேறினார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வைட்ஃபீல்ட் பகுதியில் வெடித்த இடத்தில் இருந்து ஒரு டைமர் மற்றும் IED இன் மற்ற பாகங்களையும் போலீசார் மீட்டுள்ளனர். எனவே, பெங்களுருவில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் எலைட் என்எஸ்ஜி குழுவினர் வெடிகுண்டு பையை வைத்த அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் டைமர் மூலம் வெடிக்கும் வகையிலான ஐஇடி என்ற வெடிகுண்டை பயன்படுத்தியுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. இதனிடையே, பெங்களூரு வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக IPC இன் பிரிவுகள் 307, 471 மற்றும் UAPA இன் 16, 18 மற்றும் 38 ஆகியவற்றின் கீழ் காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, விசாரணை முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதுவரை கிடைத்த பல்வேறு தடங்களில் பல குழுக்கள் பணியாற்றி வருகின்றன. அதாவது, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பெங்களூரு போலீசாருடன் இணைந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்பதே முக்கிய முன்னுரிமை என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

கும்பகோணம் ஸ்ரீ செல்வ சக்தி விநாயகர் திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் வயது உயர்வு