in

தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் வயது உயர்வு


Watch – YouTube Click

தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் வயது உயர்வு

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் சில நாட்கள் உள்ளது. இந்நிலையில், முதியோர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை மத்திய அரசின் சட்ட அமைச்சகம் கொடுத்துள்ளது. அதன்படி தபால் மூலம் வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இப்போது 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மட்டுமே வீட்டில் இருந்து வாக்களிக்க முடியும். இந்த வயதிற்குட்பட்ட மூத்த குடிமக்கள் இனி வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தபால் மூலம் வாக்களிக்கும் வயது 80 ஆக இருந்தது. ஆனால் 2019 மற்றும் 2023 சட்டமன்றத் தேர்தல்களில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் மூலம் வாக்களிக்காமல் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல விரும்பினர். இதைக் கருத்தில் கொண்டு, தபால் ஓட்டுக்கான வயதை தேர்தல் ஆணையம் உயர்த்தி உள்ளது.

தற்போது நாட்டில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் மொத்த எண்ணிக்கை 1.75 கோடியாக உள்ளது. இதில் 98 லட்சம் பேர் 80-85 வயதுக்குட்பட்டவர்கள். மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியில் உள்ள பணியாளர்கள், ராணுவ வீரர்கள், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு தபால் ஓட்டுச் சீட்டு வசதி வழங்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.


Watch – YouTube Click

What do you think?

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் அடுத்தடுத்து வெளியாகும் சிசிடிவி காட்சிகள்

திண்டிவனத்தில் ஸ்ரீ திந்திரிணீஸ்வரர் கோவிலில் பாலாலய பூஜை