in

ராகுல் காந்தி யாத்திரை நிறைவு


Watch – YouTube Click

ராகுல் காந்தி யாத்திரை நிறைவு

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முன்னதாக கான்னியகுமாரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மாநிலங்களில் பெரும் வரவேற்ப்பு கிடைத்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் மீண்டும் தனது நடைப்பயணத்தை கிழக்கில் இருந்து மேற்காக தொடங்கினார்.

கடந்த ஜனவரி 14ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் “பாரத ஒற்றுமை நியாய யாத்திரை” எனும் பெயரில் தனது நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி. மணிப்பூர், நாகலாந்து, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் கடந்து சுமார் 6,700 கிமீ நடந்துள்ளார். தற்போது மகாராஷ்டிராவில் தனது ஒற்றுமை யாத்திரையை தொடர்ந்து வருகிறார்.

இந்த பாரத ஒற்றுமை நியாய யாத்திரை நாளை நிறைவடைய உள்ளது. நாளை மகாராஷ்டிராவில் மும்பை நகரில் சிவாஜி பூங்காவில் பிரமாண்ட விழாவை இதற்காக காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில், இந்தியா கூட்டணி அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ள்ளனர்.

நாளைய கூட்டத்தில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் (சரத் அணி) தலைவர் சரத்பவார் உள்பட இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அண்மையில் தலையில் அடிபட்டு சிகிச்சையில் இருப்பதால் அவர் வருவதாக தெரியவில்லை. ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வருகை பற்றிய தகவல்களும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.


Watch – YouTube Click

What do you think?

அவன் என்று கூறி சர்ச்சை ஏற்படுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கொடைக்கானலில் வீட்டின் மேற்கூரையை உடைத்து வீட்டிற்குள் புகுந்து காட்டெருமை அட்டகாசம் ..