in

அதிமுக சார்பில் மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேற்றி பெற்றால் உங்கள் முதலமைச்சர் முனிசிபலிட்டி சேர்மேனாக சென்றுவிடுவார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ்,பாஜக ஆகிய மூதேவிகள் ஆட்சி ஆண்டனர் ஆனால் மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் மோடி அது செய்வார், இது செய்வார் என்றார்கள். இதுவரை புதுச்சேரிக்கு என்ன செய்தார் என சிவி சண்முகம் கடுமையான விமர்சனம்…

புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்காதது, மத்திய அரசைக் கண்டித்தும், புதுச்சேரியை ஆளும் அரசு, ரேஷன் கடைகளைத் திறக்காதது, பொது விநியோகத் திட்டத்தை அமல்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி புதுச்சேரியில் அதிமுக சார்பில் மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஏ.எப்.டி மைதானத்தில் தொடங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், எம்.பி தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் முன்னிலை வகித்தார்.இந்த பேரணி ஆர்ப்பாட்டமானது ஏ.எப்.டி மைதானத்தில் தொடங்கி வெங்கடசுப்பாரெட்டியார் சிலை, அண்ணாசாலை, நேருவீதி, மிஷன்வீதி வழியாக சென்று சட்டப்பேரவை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்…புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசமாக இருக்கிறது. அத்தியாவாசிய திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. செயல்படுத்த முடியவில்லை. எதை எடுத்தாலும் மத்திய அரசாங்கத்துடைய அனுமதிக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மட்டும் உங்கள் முதலமைச்சர் ஒரு அமைச்சரை நீக்குகிறார் நீக்கிய பிறகும் இரண்டு மாத காலம் அவர் பதவியை தொடற்கிறார். இப்படி ஒரு மானங்கெட்ட ஒரு பதவி தேவையா? ஒரு முதலமைச்சர் தன் அதிகாரத்தை கூட பயன்படுத்த முடியாத அளவுக்கு மதிய அரசாங்கத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்ற ஒரு நிலைமை மாறவேண்டும். வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும், அடிமட்ட மக்களுக்கு, தாய்மார்களுக்கு மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை போட வேண்டும் என்றால் அந்த திட்டங்களுக்கு நிதி தேவை அந்த நிதி ஆதாரத்தை பெருக்குகின்ற அதிகாரம் அந்த ஆளுகின்ற அரசுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேற்றி பெற்றால் உங்கள் முதலமைச்சர் முனிசிபலிட்டி சேர்மேனாக சென்றுவிடுவார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.மத்தியில் காங்கிரஸ், பாஜக ஆகிய மூதேவிகள் ஆட்சி ஆண்டனர் ஆனால் மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை.பாஜக ஆட்சிக்கு வந்தால் மோடி அது செய்வார், இது செய்வார் என்றார்கள். இதுவரை புதுச்சேரிக்கு என்ன செய்தார்.

இந்தியா முழுவதும் பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகின்றன. விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை அதனை என்ற ஒரே ஆள் தான் வாங்குகிறார்.மாநில அந்தஸ்து பெற்றால், நிதி குழுவில் ஏன் புதுச்சேரியை பாஜக சேர்க்க மறுக்கிறது. சேர்த்தால் பத்தாயிரம் கோடி வரி பணம் செலுத்தினால் 4 ஆயிரம் கோடி நமக்கு வரும்..அப்போ மத்திய அரசை நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை.

பாஜக மதம் மற்றும் ஜாதியை சொல்லி வாக்குகளை வாங்க பார்க்கிறது.பாரதிய ஜனதா கட்சி என்று ஒன்று இல்லை. என்.ஆர்காங்கிரஸ், காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று பாஜக என்று லேபில் ஒட்டியுள்ளனர். உங்கள் உரிமைகளை பெற வேண்டும் என்றால் அது அதிமுகவால் தான் முடியும். மாநில உரிமைகளை விட்டுகொடுக்காத இயக்கம் அதிமுக. மாநில உரிமை பெறவும், நிதிக்குழுவில் சேர்க்கவும், வேலைவாய்ப்பில் இணொதுக்கீடு பெற வேண்டும் என்றால் அதை பெற்று தரும் இயக்கம் அதிமுக தான். புதுச்சேரியில் தேர்தல் நேரத்தில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்…

மேடை பேச்சு…சிவி சண்முகம்..எம்பி.. தமிழக முன்னாள் அமைச்சர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்..

1980க்கு பிறகு புதுச்சேரி ஆண்ட திமுக காங்கிரஸ் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அரசு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என்று ஒரு பொய்யான வாக்குறுதியை கொடுத்து மாநில அந்தஸ்து பெற்றுக் கொடுப்போம் நிதி கமிஷனில் சேர்ப்போம் என்று கடந்த 40 ஆண்டு காலமாக புதுச்சேரி மக்களை ஏமாற்றி வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் வெற்றி கூட்டணி அமைக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி தெரிவித்துள்ளார் அது விரைவில் அறிவிக்கப்படும் என்ற தொகுதி பங்கீடு குறித்தும் கூட்டணிகள் குறித்தும் எடப்பாடி விரைவில் அறிவிப்பார் என்று குறிப்பிட்ட சி.வி சண்முகம் ஓபிஎஸ் என்பது ஒரு வெத்துவேட்டு அவருடைய சகாப்தம் முடிந்து விட்டது பெருங்காய டப்பா சத்தம் போடுவது போல் போட்டுக் கொண்டிருக்கிறார் அவர் சொல்வதை யாரும் கேட்க இங்கு தயாராக இல்லை என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.


Watch – YouTube Click

What do you think?

விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் ஆளுநர் ரவி வேண்டுகோள்

பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்