திருப்பரங்குன்றம் தீபதூனில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு வரவேற்பு
திருப்பரங்குன்றம் தீபதூனில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு வரவேற்பு; கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி திருக்கோயில் முருகன் சன்னதியில் தீபம் ஏற்றி பாஜகவினர் வழிபாடு.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, நாளை நவ. 28 தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனவும், இந்நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அப்பகுதியில் உரியப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள மத்தியப் பாதுகாப்புப் படையினரை நியமிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்கும் விதமாக, கீழ்வேளூர் அருள்மிகு அட்சயலிங்க சுவாமி திருக்கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் பாஜக கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் நிஜந்தன் தலைமையில், முன்னாள் மாவட்ட துனை தலைவர் T.G.பாபு, விவசாய அணி மாவட்ட தலைவர் பாபு பிரசாத், மற்றும்
நிர்வாகிகள் ஒன்றுதிரண்டு தீபமேற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “பக்தர்களின் வழிபாட்டு உரிமைகள் எவ்விதத் தடையுமின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைத் தமிழக அரசும், அதிகாரிகளும் எவ்விதப் பாரபட்சமுமின்றி முறையாக அமல்படுத்த வேண்டும்” என வலியுறுத்தினர்.

