in

புதிய அமைச்சராக காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் பி. ஆர். என். திருமுருகன் பதவியேற்பு


Watch – YouTube Click

புதிய அமைச்சராக காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் பி. ஆர். என். திருமுருகன் பதவியேற்பு

 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து பணியாற்றி வந்த அவர் ஆளும் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடந்த 10-10- 2023 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை அடுத்து அமைச்சர் பதவி காலியாகவே இருந்து வந்தது இந்த நிலையில்…

காரைக்கால் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள பி. ஆர். என். திருமுருகனை அமைச்சராக நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார்.

இதனை அடுத்து இரண்டு முறை தேதி அறிவிக்கப்பட்டு அமைச்சர் பதவி ஏற்பு விழா தள்ளிப்போன நிலையில் இன்று துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பி. ஆர். என். திருமுருகன் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த பதவி ஏற்பு விழாவில்… முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் அமைச்சர்கள் லஷ்மி நாராயணன், தேனீ. ஜெயக்குமார், சாய். சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு உள்ளிட்ட என் ஆர் காங்கிரஸ் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் காரைக்கால் புதுச்சேரியை சேர்ந்த திருமுருகனின் ஆதரவாளர்கள், மற்றும் அவரது குடும்பத்தார் என அனைவரும் திரளாக பங்கேற்றனர்.

பதிவேற்றுக்கொண்ட திருமுருகன் முதலமைச்சர் ரங்கசாமி காலில் ஆறு முறை விழுந்து வாழ்த்துக்களை பெற்றார். தொடர்ந்து அவருடைய தாய்க்கு பொன்னாடை அணிவித்து அவரைக் கட்டி அணைத்து அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.

அமைச்சராக பதிவேற்றுக்கொண்ட திருமுருகனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் சால்வைகள் அணிவித்தும், பூங்கொத்துக்கள் கொடுத்தும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

அமைச்சர் திருமுருகனின் வாழ்க்கை வரலாறு…..

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் புதிய அமைச்சராக பதவி ஏற்றுள்ள பி. ஆர். என். திருமுருகன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் எம்எல்ஏ நள மகாராஜனுடைய மகன் ஆவார். 1972 ஆம் ஆண்டு பிறந்த இவர் பி.ஏ சமூகவியல் படித்துள்ளார்.

திருமணமான இவருக்கு மனைவி ஒரு மகள் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய இவர் காரைக்கால் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், பி.சி.சி உறுப்பினராகவும், காரைக்கால் மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த பி. ஆர். என். திருமுருகன், என். ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2011,2016 மற்றும் 2021 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் காரைக்கால் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர் காரைக்கால் மாவட்ட என். ஆர். காங்கிரஸ் தலைவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

பிரதீபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி

புதிய அமைச்சரை சட்டப்பேரவை அலுவலக அறையில், ரங்கசாமி அமர வைத்தார்