in

தேக்வாண்டோ போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நிரோஷா பேட்டி


Watch – YouTube Click

தேக்வாண்டோ போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நிரோஷா பேட்டி

 

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு எனது வாழ்த்துக்கள். தான் எந்த கட்சியும் இல்லை ஆனாலும் மக்கள் பணிகளை செய்து வருகிறேன். புதுச்சேரியில் நடிகை நிரோஷா பரபரப்பு பேட்டி

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான மாநில அளவில் தற்காப்பு கலைகளான தேக்வாண்டோ போட்டி புதுச்சேரி இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று தொடங்கியது.

இதில் பெண்களுக்கான தூதர் நடிகை நிரோஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேக்வாண்டோ போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சபாநாயகர் செல்வம் மற்றும் புதுச்சேரி ஒலிம்பிக் சங்க தலைவரும் அமைச்சருமான தேனீ. ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நிரோஷா கூறும் போது…

தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு தற்காப்பு கலை அவசியம் அப்போதுதான் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும், ஏனென்றால் முந்தைய காலகட்டங்கள் வேறு தற்போது உள்ள காலகட்டங்கல் வேறு இப்பதெல்லாம் பகலிலே வெளியில் செல்வதற்கு கூட பயமாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ளும்போது தான் பெண்களுக்கும் தன்னம்பிக்கை ஏற்படும், என்று குறிப்பிட்டார்.

நடிகர் விஜய் தனது நீண்ட கால நண்பர் அவர் அரசியல் கட்சி தொடங்கியதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

மேலும் விஜய் கட்சியில் இணைய போகிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்..

தான் எந்த கட்சியும் இல்லை மக்கள் கட்சி தான் ஏற்கனவே மக்கள் பணிகளை செய்து வருவதாக குறிப்பிட்டார். மேலும் தனக்கு கை வசமாக ஐந்துக்கு மேற்பட்ட படங்கள் உள்ளது அதில் ஹீரோயினாக நடித்து வருவதாகவும் நிரோஷா தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

மகிழ் திருமேனியை அழவைக்கும் அஜீத் மற்றும் த்ரிஷா..நொந்து போன லைக்கா

சிவகங்கை காளியம்மன் திருக்கோவிலில் விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை