in

அதிமுக மீண்டும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்

அதிமுக மீண்டும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா திருப்பனந்தாள் பூக்கடை மகேந்திரன், அதிமுக வர்த்தக அணி மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். தற்போது அதிமுக பிளைவு ஏற்பட்டு பிரிந்துள்ளது.

என்று மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று பேஸ்புக் மூலமாக வீடியோ பதிவு செய்து திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவர் தனது பேஸ்புக் மூலம் அனைவருக்கும் வணக்கம் நமது இயக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் சில விஷயங்கள் எனக்கு மன வேதனை தருகிறது என்னை ப் போன்ற பல இளைஞர்களின் மனதிற்கு ரொம்ப வேதனையாக உள்ளது எனது இறப்பிற்குப் பிறகாவது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் அண்ணன் எடப்பாடி யார் அவர்கள் தலைமையில் அம்மாவின் ஆட்சிஅமைய வேண்டும்.

அனைத்து தொண்டர்களும் கழக நிர்வாகிகளும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் இதுவரை என்னோடு பயணித்த அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி இதுவே எனது கடைசி வீடியோ என்னுடைய உடலுக்கு நான் வணங்கும் மனித தெய்வம் அண்ணன் எடப்பாடி யார் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினால் என்னுடைய ஆத்மானுடைய ஆத்மா சாந்தி அடையும் நன்றி விடைபெறுகிறேன் 🙏 என்று பதிவிட்டுள்ளார்.

What do you think?

ஆரம்ப சுகாதார நிலையம் மின்வாரிய அலுவலகம் மற்றும் மாப்பிள்ளை யுரனி பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு

தஞ்சை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ரேவதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்