in

அரசு ஏசி பேருந்தில் தீ விபத்து

அரசு ஏசி பேருந்தில் தீ விபத்து

 

வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு ஏசி பேருந்தில் தீ விபத்து

​நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் சென்னை செல்வதற்காகத் தயாராக நின்று கொண்டிருந்த அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) குளிர்சாதனப் (AC) பேருந்தில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது.

​வேதாரண்யத்திலிருந்து சென்னை நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த அந்தப் பேருந்தில் இருந்து, திடீரெனப் பலத்த புகையுடன் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பேருந்து நிலைய பயணிகள் அலறியடித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

​சம்பவத்தின் போது பேருந்தினுள் பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
​தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர்.

எனினும் பேருந்தின் பகுதி சேதமடைந்தது. இந்தத் திடீர் தீ விபத்தால் வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் சில மணி நேரம் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

​இதனைத் தொடர்ந்து, சேதமடைந்த பேருந்து டிராக்டர் மூலம் இழுத்துச் செல்லப்பட்டு வேதாரண்யம் அரசுப் பணிமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான முதற்கட்டக் காரணம் குறித்துப் காவல்துறையினரும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

குருத்தோலை சப்பரத்தில் மஹா மாரியம்மன் வீதியுலா

உலக நன்மை வேண்டி அபயாம்பிகை அம்மனுக்கு நெய்க்குள தரிசனம்