in

ஆடி கிருத்திகை பெருவிழா பால்குடம், காவடியுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஆடி கிருத்திகை பெருவிழா பால்குடம், காவடியுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஆடி கிருத்திகை பெருவிழா: ஓசூரில் வள்ளி–தெய்வானை சமேத அழகன் முருகன் கோவிலில் பால்குடம், காவடியுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி–தெய்வானை சமேத அழகன் முருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகை பெருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன.
விழாவையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து, முருகப்பெருமானுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். “அரோகரா” என்ற பக்தி முழக்கங்களால் கோவில் வளாகம் முழுவதும் ஆன்மிகச் சூழல் நிலவியது.
 மேலும் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக காவடி ஆட்டம் நடைபெற்றது.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதுடன், விழாவில் கலந்து கொண்ட அனைவரும் முருகப்பெருமானை தரிசித்து அருள்பெற்றனர்.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் கமிட்டி நிர்வாகிகள்  ரத்தினம், ஜெயக்குமார் ரெட்டி, சீனிவாசன் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் வசதிக்காக தேவையான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆடி கிருத்திகை பெருவிழா பக்தர்களின் திரளான பங்கேற்புடன் சுவாமி அருள் பெற்றனர்,.

What do you think?

ஓசூர், ஸ்ரீ வேல்முருகன் கோவில் ஆடி கிருத்திகை

நாமக்கல் களங்குளம் ஆடி மாத தேய்பிறை அஷ்டமி