in

அதிமுக வேட்பாளர் இறுதி செய்யப்பட்டு விட்டது புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் பேட்டி


Watch – YouTube Click

அதிமுக வேட்பாளர் இறுதி செய்யப்பட்டு விட்டது புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் பேட்டி

புதுச்சேரி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளராக தமிழ்வேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் கொண்டாடினர்.

தொடர்ந்து புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வேட்பாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன். கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய கட்சிகளான பாஜக காங்கிரஸ் எந்த ஒரு மக்கள் திட்டங்களையும் செய்யவில்லை தற்போது மீண்டும் தேர்தலை சந்திக்கிறார்கள் என்ன சொல்லி வாக்கு கேட்பார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர் அதிமுக வேட்பாளர் வெற்றி இறுதி செய்யப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய வேட்பாளர் தமிழ்வேந்தன். தேசியக் கட்சிகளுடன் போட்டியிடும் தான் மக்களை நம்பி போட்டியிடு வதாகவும் தான் வெற்றி பெற்றால் புதுச்சேரியில் வேலைவாய்ப்பு தொழில் துறையை மேம்படுத்துவேன் நான் வெற்றி பெற்றால் மாநிலம் முழுவதும் உள்ள கஞ்சாவை ஒழிப்பேன் மாநில அந்தஸ்தை பெற்றுக் கொடுப்பேன் என்றும் வாக்குறுதி அளித்த அவர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று குறிப்பிட்டார்.


Watch – YouTube Click

What do you think?

மத்திய அரசே பொறாமைப்படும் திராவிட மாடலின் தேர்தல் அறிக்கை

இந்தியா கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் துரைவைகோ பேட்டி