in

மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனை

மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனை

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைந்துள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவிலில், மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

இதையொட்டி, கோவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து விநாயகப் பெருமானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு புனித திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பஞ்சமுக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் விநாயகருக்கு அபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகரில் அமைந்துள்ள அருள்மிகு பஞ்சமுக விநாயகர் திருக்கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதையொட்டி, விநாயகப் பெருமானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு புனித திரவியப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

What do you think?

அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலய ஆவணித் திருவிழா

நேபாள் பேரிடரில் தப்பி பிழைத்த தம்பதியினர்