in

பொதுமக்களின் மனுக்கள் மீது அலுவலர்கள் கனிவுடன் பரிவுடன் நடவடிக்கை


Watch – YouTube Click

பொதுமக்களின் மனுக்கள் மீது அலுவலர்கள் கனிவுடன் பரிவுடன் நடவடிக்கை

 

பொதுமக்களின் மனுக்கள் மீது அலுவலர்கள் கனிவுடன் பரிவுடன் நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 698 மனுக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. தெ. பாஸ்கர பாண்டியன், I.A.S., அவர்களால் பெறப்பட்டு, அவர்களின் மனுக்கள் மீது அலுவலர்கள் கனிவுடன் நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திங்கள் தோறும் பொதுமக்களிடம் பெரும் மனுக்களின் மீது மாவட்ட ஆட்சியர் பொதுமக்களின் நலன் கருதி மனுக்கள் பெறும் இடங்களில் பொதுமக்கள் அமர்ந்து மனுக்களை பதிவு செய்யவும், பதிவு செய்யப்பட்ட மனுக்கள் மீது குறைதீர்க்க கூட்டத்தில் மனுதாரர்கள் அமர்வதற்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டும் அந்த இருக்கையிலேயே துரை சார்ந்த அலுவலர்கள் அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து அதனை மாவட்ட ஆட்சியரிடத்திலே மனுதாரர்களுடன் அலுவலர்களும் சேர்ந்து எடுத்துரைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தலை தொடர்ந்து மக்களின் மனுக்கள் பெறப்பட்டன. மேலும் மக்களுக்கு குடிக்கிறதற்கு குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து, மக்கள் மகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவித்தனர்.

மேலும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெண்கள், வயதானவர்கள், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முன் உரிமை அளித்து மனுக்களை பெறுவதோடு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.

அதனை தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நடவடிக்கை எடுத்து துறை சார்ந்த அலுவலர்கள் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து மனுவின் மீது முடிந்தவரை உடனடி தீர்வு காண அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இன்று மனு வழங்க வந்த ஒரு தனி நபர் தன் மீது மண்ணெணய் ஊற்றி தீ வைத்து கொள்ள முயற்சி செய்தவரை காவல்த்துறை உடனடியாக அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி தெரிவித்தார். மேலும் மனு வழங்க வரும் மக்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை கடுமையாக மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி துறை, வேலைவாய்ப்பு துறை, வேளாண்மை துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் பிற துறைகளில் பொது மக்களின் பெரும்பான்மையான மனுக்கள் பெறப்படுவதால் அவர்களை உடனுக்குடன் தீர்வு காண துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித்;தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 67 மனுக்களும், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 63 மனுக்களும் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ரூபாய் 36 ஆயிரம் மதிப்பில் 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ. பாஸ்கர பாண்டியன்,I A S., அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, தனித்துனை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி. தீபசித்ரா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு. சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

தாறுமாறாகவும் அபத்தமாகவும் படம் எடுத்து சர்ச்சையில் மாட்டிக் கொள்வது.

ஆம்புலன்ஸ் சைரனுக்கும் போலீஸ் சைரனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம்