ஆவணி மாத பௌர்ணமி தின திருவிளக்கு பூஜை
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி தின திருவிளக்கு பூஜை
உலக நன்மைக்காகவும் 108 பெண்கள் பங்கேற்று பூஜை செய்து வழிபட்டனர்.

மாரியம்மன் அலங்காரத்தில் அருள்பாளித்த அங்காளம்மனை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆவணி மாதம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார்.

மேலும் உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களைக் கொண்ட மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் உற்சவ அம்மனுக்கு பம்பை மேளதாளம் முழங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 108 பெண்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டு மனம் உருகி வழிபாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்காளம்மனுக்கு அர்ச்சனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

