in

திண்டிவனம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலய 50ம் ஆண்டு ஆடித்திருவிழா மாரியம்மன் அலங்காரம்

திண்டிவனம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலய 50ம் ஆண்டு ஆடித்திருவிழா மாரியம்மன் அலங்காரம்

 

திண்டிவனம் இலுப்பதோப்பு அருள்மிகு ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் என்கின்ற ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு 50 ஆம் ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் இலுப்பத்தோப்பு அருள்மிகு ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் என்கின்ற ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு50 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து வண்ண மலர்களால் உற்சவர் அம்மன் ஸ்ரீ மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை,சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரங்கள், கும்ப தீபம், பஞ்சமுக தீபாரதனை, கற்பூர ஆர்த்தி ஆகியவை காட்டப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

 கன மழையில் வேரோடு சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலய 50 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா அர்த்தனாரீஸ்வரி அலங்காரம்