in

ஆயுதப்படை மைதானத்தில் நடந்த 80 வது ஆண்டு சுதந்திர தின விழா

ஆயுதப்படை மைதானத்தில் நடந்த 80 வது ஆண்டு சுதந்திர தின விழா

 

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த 80 வது ஆண்டு சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ரேவதி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மூவர்ண நிற பலூன்கள் மற்றும் சமாதான புறாக்களை பறக்க விட்டு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து திறந்த காவல் வாகனத்தில் நின்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு கதர் ஆடை அணிவித்து கெளரவித்தார்.

41 துறைகளின் சார்பில் 244 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரேவதி விருது வழங்கி பாராட்டினார்.

What do you think?

தேவி ஸ்ரீ கடை வாசல் மாரியம்மன் திருக்கோவிலின் ஆடிப்பூர விழா

பெரியாண்டிச்சி அம்மன் ஆலய முப்பூசை திருவிழா