“கர்நாடகாவை விட்டே விரட்டுவோம்!” – யாஷிற்கு அதிரடி எச்சரிக்கை!
‘கே.ஜி.எஃப்’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நம்ம ராக்ஸ்டார் யாஷ் நடிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்துல உருவாகியிருக்கிற பிரம்மாண்ட திரைப்படம் தான் ‘டாக்ஸிக்’!
நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த்னு மிகப்பெரிய பட்டாளமே நடிச்சிருக்க இந்த படத்தோட டிரெய்லர் சமீபத்துல வெளியாகி மாஸ் காட்டுச்சு.
ஆனா, இப்போ இந்த டிரெய்லருக்கு எதிராகப் கிளம்பியிருக்கிற ஒரு மிகப்பெரிய சர்ச்சை கோலிவுட், சாண்டல்வுட் வட்டாரத்தையே அதிர வச்சிருக்கு!
கன்னட நடிகையான ரிஷிகா சிங் இப்போ ஒரு வீடியோ வெளியிட்டு ‘டாக்ஸிக்’ படக்குழுவையும் யாஷையும் கடுமையா தாக்கிப் பேசியிருக்காரு!
“கன்னட சினிமா உலகளவில் வளருறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். ஆனா, அந்த வளர்ச்சி பெண்களோட கண்ணியத்தைக் கெடுக்குற மாதிரி இருக்கக் கூடாது.
‘டாக்ஸிக்’ டிரெய்லருல பெண்களைச் சித்தரிச்சிருக்க விதம் ரொம்பவே வருத்தமளிக்குது. 5 முன்னணி நடிகைகளை வச்சுக்கிட்டு ஒருத்தரையாவது மரியாதையாவோ அழகாவோ காட்டியிருக்கீங்களா?
பாலிவுட்ல இருந்து கியாரா அத்வானியை கூட்டிட்டு வந்து வெறும் கவர்ச்சிக்காகப் பயன்படுத்துறது தான் உங்க சினிமாவா?”னு சரமாரியா கேள்வி எழுப்பியிருக்காரு!
“கர்நாடகாவை விட்டே விரட்டுவோம்!” – யாஷிற்கு அதிரடி எச்சரிக்கை!
தொடர்ந்து யாஷை நேரடியாக எச்சரிச்ச ரிஷிகா சிங், “யாஷ் ஒரு குடும்பத் தலைவர், ஒரு பெண் குழந்தைக்கு அப்பா! அப்படிப்பட்டவர் பெண்களுக்கு மரியாதை தர்ற மாதிரி கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டாமா? திரையில பெண்களுக்குச் சரியான மரியாதை கொடுக்கலைனா, யாஷை நாங்க கர்நாடகாவை விட்டே வெளியேற வச்சுடுவோம்!”னு செம கொந்தளிப்பா பேசியிருக்காரு!
வரும் ஆகஸ்ட் 26 அன்னைக்கு ரிலீஸாகப் போற இந்த ‘A’ சான்றிதழ் பெற்ற ‘டாக்ஸிக்’ படத்துல உண்மையிலேயே பெண்களைக் கேவலமா காட்டியிருக்காங்களா இல்ல கதைக்குத் தேவையான காட்சிகளாங்கிறது படம் ரிலீஸான அப்புறம்தான் தெரியும்!
நடிகை ரிஷிகா சிங்கின் இந்த அதிரடி குற்றச்சாட்டு பத்தியும், ‘டாக்ஸிக்’ படத்துல பெண்களோட ரோல் பத்தியும் நீங்க என்ன நினைக்கிறீங்க மக்களே?

