in

இளங்கிளி அம்மனுக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா

இளங்கிளி அம்மனுக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா

 

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் புகழ்பெற்ற அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் இளங்கிளி அம்மனுக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலமான இரு கருவறை கொண்ட பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்ட அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

இக்கோயிலில் ஆடிப்பூர விழாவையொட்டி விநாயகப்பெருமான், ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனைகள் நடைபெற்றது.

அதன் பின்னர், மூலவரான இளங்கிளி அம்மன் மற்றும் உற்சவரான இளங்கிளி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வு நடைபெற்றது.

இவ்நிகழ்வில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் கலந்துகொண்டு சுகப்பிரசவம் நடைபெற அம்மனை வேண்டினர்.

இவ்விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது. அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும்,
அன்னதானமும் வழங்கப்பட்டன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

What do you think?

கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 80-வது சுதந்திர தின விழா

புதுச்சேரியில் கோலாகலமாக நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழா