in

ஆம் ஆத்மி கட்சியின் விவசாய வல்லுனர் குழு ஆய்வு

ஆம் ஆத்மி கட்சியின் விவசாய வல்லுனர் குழு ஆய்வு

 

ராசிமணலிலிருந்து பூம்புகாரில் காவிரி கடலுடன் கலக்கும் இடம் வரை, ஆம் ஆத்மி கட்சியின் விவசாய வல்லுனர் குழு ஆய்வு, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் பிரச்சினை காவிரி பகுதிகளில் மிகுதியாக காணப்படுகிறது.

தவெக அரசு இடைத்தேர்தலில் மட்டும் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, காவேரி பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேட்டி .

ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் அணி சார்பில் அதன் மாநில விவசாயிகள் அணி தலைவர் மு ஜெயபாலன் தலைமையில் விவசாயிகள் குழு ராசிமணல் பகுதியில் இருந்து, காவிரி கரையோர மாவட்டங்களின் வழியாக, காவிரி பூம்புகாரில் கடலுடன் கலக்கும் பகுதி வரை கள ஆய்வு மேற்கொண்டது.

கடந்த 26 ஆம் தேதி தர்மபுரியில் தொடங்கிய கள ஆய்வு இன்று பூம்புகாரில் நிறைவடைந்தது. தொடர்ந்து மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த, அக்கட்சியின் வழக்கறிஞர்கள் அணி பொறுப்பாளர் GMசங்கர், இந்த கள ஆய்வின் போது அமராவதி நொய்யல் பவானி ஆறுகளிலும் ஆய்வு மேற்கொண்டதாகவும், காவிரி கரையோர மாவட்டங்களில் குடிநீர் என்பது மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது.

பல்வேறு இடங்களில் நேரடி விதைப்பு மேற்கொண்டு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். தமிழக வெற்றிக்கழக அரசு, இடைத்தேர்தலில் மட்டும் கவனம் செலுத்துகிறது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் நமக்கு தர வேண்டிய கர்நாடகத்தை பணிய வைத்து தண்ணீர் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஆம் ஆத்மி கட்சியின் பிரதான கோரிக்கை என்று தெரிவித்தார்.

What do you think?

சட்டசபையில் நேரு எம்எல்ஏ பொதுமக்களுடன் தர்ணா

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் பேட்டி