மியூசிக் வாழ்க்கையை நிறுத்தப்போறாரா அனிருத்? ”ரொம்ப டார்ச்சரா இருக்கு!” திடீர் முடிவால் அதிர்ச்சி!
‘3’ படத்துல அறிமுகமாகி, இப்போ கோலிவுட், பாலிவுட், டோலிவுட்னு இந்திய சினிமாவையே தன்னோட மியூசிக்கால ஆட்டி படைச்சுட்டு வர்ற நம்ம ராக்ஸ்டார் அனிருத் பற்றி தான் பார்க்கப்போறோம்!
ஷாருக்கானோட ‘கிங்’, சூப்பர் ஸ்டார் ரஜினியோட ‘ஜெயிலர் 2’, ‘தர்மன்’, அல்லு அர்ஜுன் – லோகேஷ் படம், அஜித் சாரோட ‘AK 64’, நானியோட ‘தி பாரடைஸ்’னு இந்திய சினிமாவின் மிக முக்கிய படங்கள் எல்லாமே இப்போ நம்ம அனி கையில தான் இருக்கு!
இவ்வளவு பிரம்மாண்ட படங்கள் கைவசம் இருக்குறப்போ, “உங்களுக்கு வேலை பிரஷர் (Work Pressure) அதிகமா இருக்காதா அனிருத்?”னு சமீபத்திய பேட்டியில ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதுக்கு அனிருத் கொடுத்த பதில் தான் இப்போ இணையத்துல செம வைரல்!
அந்த கேள்விக்குக் கூலா பதிலளிச்ச அனிருத், “மியூசிக் போடுறதுக்கு எனக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்படுது. அவ்வளவு காசு வாங்கிட்டு வேலை செய்றப்போ, எனக்கு பிரஷரா இருக்குனு தோணுனா நான் அந்த இடத்துலயே இருக்க மாட்டேன்!
வேலையைத் தூக்கிப் போட்டுட்டு அங்கிருந்து வெளியேறிடுவேன்!”னு செம ஓப்பனா பேசியிருக்காரு!
“நமக்குப் பிடிச்ச வேலையை சந்தோஷமா செய்யணும், காசு வாங்குற அளவுக்கு நேர்மையா உழைக்கணும். முடியாதப்போ கஷ்டப்பட்டு அங்க நிற்கக் கூடாது”ங்குற தன்னோட தெளிவான பிசினஸ் மைண்ட்செட்டை அனிருத் இதுல காட்டியிருக்காரு!
தொடர்ந்து தன்னோட மியூசிக் பற்றி பேசின அவரு, “ஒரு படத்தைப் பார்க்க தியேட்டருக்கு 10 பேர் வர்றாங்கன்னா, என்னோட பாட்டு மற்றும் பிஜிஎம் (BGM) மூலமா அந்த எண்ணிக்கையை 13 அல்லது 14 பேரா உயர்த்தணும்!
அதுதான் ஒரு மியூசிக் டைரக்டரோட உண்மையான வேலை”னு மாஸா சொல்லியிருக்காரு!
அவர் சொன்ன மாதிரியே, இப்போ பல படங்கள் அனிருத்தோட பாட்டுக்காகவும், பிஜிஎம்க்காகவும் தான் தியேட்டருக்கே கூட்டத்தைக் கூட்டுதுங்கறது மறுக்க முடியாத உண்மை!
சம்பளத்தையும், வேலையையும் இவ்ளோ தெளிவா அணுகுற நம்ம ராக்ஸ்டார் அனிருத்தோட இந்த பேச்சு பத்தியும், அவரோட அடுத்தடுத்த மாஸ் படங்களோட மியூசிக் மேல இருக்குற எதிர்பார்ப்பு பத்தியும் நீங்க என்ன நினைக்கிறீங்க மக்களே? மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!”


