in

டாஸ்மாக் தொ.மு.ச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் தொ.மு.ச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொ.மு.ச ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மதுபான சில்லரை விற்பனையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்

ஆன்லைன் மதுவிற்பனை திட்டத்தை திரும்ப பெற வேண்டும்

பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்

காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச டாஸ்மாக் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்

பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது எங்களது நடைமுறை செலவு இடம் வாடகை, பாட்டில் சேமிப்பு இடம் வாடகை உடையும் பாட்டில் அட்டை பெட்டி சேதாரம் லாரியில் ஏற்றுக் கூலி இறக்கு கூலி போன்ற நெருக்கடி இருப்பதால் கூடுதல் விலைக்கு விற்கிறோம்.

எங்களுக்கு தேவையான வசதிகள் அரசு செய்து கொடுத்தால் நாங்கள் கூடுதல் விலைக்கு விற்க மாட்டோம் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

What do you think?

தஞ்சாவூர் பெரிய கோயில் மதில் மேல் சுவரில் சுத்தப்படுத்தல் பணி

வந்தவாசியில் விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரம்