உயிரிழந்த சிறுவனின் உடலை பெறாமல் குடும்பத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்
அரசு மருத்துவமனையில் 60 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
உயிரிழந்த சிறுவனின் உடலை பெறாமல் குடும்பத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்
மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சியால் சிறுவனின் உயிர் பறிபோனதாக புகார் தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பவருடைய 14 வயது மகன் நிவாஸ் குமார், இவருக்கு கடுமையான சளி மற்றும் உடல்நல குறைவு காரணமாக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்
அப்போது சிறுவனுக்கு மூக்கில் சதை வளர்ந்துள்ளதாகவும் அதனை அகற்றுவதற்கு மேற்கொண்ட சிகிச்சையில் சிறுவனுக்கு சுவாச குழாய் வழியாக செலுத்தப்பட வேண்டிய டியூபை
தவறுதலாக உணவு குழாய் வழியாக செலுத்தி தவறான சிகிச்சை மேற்கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கோமா நிலையில் சிகிச்சையில் இருந்த சிறுவன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
சுமார் 60 நாட்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சிறுவனின் தாய் மற்றும் உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது
இதனை அடுத்து உயிரிழந்த சிறுவனின் உடலை பெறாமல் அவரது குடும்பத்தினர் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் தேனி – மதுரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
இதனை அடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்திய பின்பு சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்
சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணம் உதவி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்


